மனைவி மற்றும் ரூ.30,000-ஐ ஒரே நேரத்தில் இழந்த கணவர்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி நீதிமன்றத்தை நாடிய கணவன், மனைவி மற்றும் 30000 ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கணவன் - மனைவி இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பெண்ணை அவரின் பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தை நாடி அப்பெண்ணின் கணவர் ஒரு மனுவை அளித்தார்.

அதில், தனது மனைவியை மிரட்டி அவர் பெற்றோர் வீட்டில் சிறை வைத்திருக்கிறார்கள் எனவும், மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் தன்னுடன் இருக்க விரும்புகிறாரா அல்லது பெற்றோருடன் இருக்க விரும்புகிறாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து பதிலளித்த நீதிமன்றம், கணவரின் புகார் உண்மை தானா என்பதை அறிய அவர் ரூ.30000-ஐ நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என கூறியது.

அப்படி அவர் மனைவி அவருடன் வாழ மறுத்தால் அந்த பணம் மனைவிக்கே தரப்படும் என கூறியது.

இதையடுத்து ரூ.30000-ஐ கணவர் நீதிமன்றத்தில் கட்டினார். இதன்பின்னர் அவர் மனைவி நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் விசாரிக்கப்பட்டது.

அதில் பெற்றோரிடம் இருக்க தான் விரும்புவதாக அவர் கூறினார். இதையடுத்து மனைவியை பிரியும் நிலைக்கு தள்ளப்பட்ட கணவர் நீதிமன்றத்தில் தான் கட்டிய பணத்தையும் நீதிபதி உத்தரவின்படி மனைவிக்கே கொடுத்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்