தீபாவளி போனஸாக 600 ஊழியர்களுக்கு சொகுசு கார்கள்: வாரிவழங்கும் அந்த வள்ளல் யார் தெரியுமா?

Report Print Raju Raju in தெற்காசியா

குஜராத்தில் உள்ள வைர நிறுவனத்தில் பணிபுரியும் 600 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சூரத் நகரில் ஹரி கிருஷ்ணா என்ற வைரக் கற்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்த நிறுவனத்தை Savji Dholakia என்ற வைர வியாபாரி நடத்தி வருகிறார், இந்த நிறுவனத்தில் சுமார் 5,500 திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனஸாக வீடுகள், தங்க நகைகள், பைக்குகள் போன்றவை பரிசாக வழங்கப்படுவது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் வைர நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக சொகுசு கார்கள் வழங்கப்பட உள்ளது.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய 1500 ஊழியர்களை தேர்வு செய்த Savji 600 பேருக்கு சொகுசு கார்களும், 900 பேருக்கு நிலையான வைப்பு சான்றிதழ்களும் வழங்குகிறார்.

இதனிடையே பணியாளர்களுக்கு சொகுசு கார்கள் வழங்கும் விழா, Varachha பகுதியில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு வைர நிறுவன ஊழியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

பரிசு பெறுவர்களில் 4 ஊழியர்கள் பிரதமர் மோடியிடம் நேரடியாக சொகுசு கார்களின் சாவியை பெற டெல்லி சென்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்