வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு புது சலுகை

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு புது சலுகை அறிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் என்.ஆர்.ஐ. என அழைக்கப்படுகிறன்றனர்.

வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினர் பி.ஐ.ஓ., (பெர்சன் ஆப் இந்தியன் ஆரிஜின்) என அழைக்கப்படுகின்றனர்.

இது தவிர, வெளிநாட்டில் குடியேறி அந்நாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களுக்கு 2006ம் ஆண்டு முதல் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் ஓ.சி.ஐ., என்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

ஓ.சி.ஐ., அடையாள அட்டை வைத்திருப்பவர்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு இதுநாள் வரை ஓ.சி.ஐ., அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ஓ.சி.ஐ (Overseas Citizenship of India) அடையாள அட்டை வைத்திருப்பவரை திருமணம் செய்யும் வெளிநாட்டினர் இனி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து, ஓ.சி.ஐ. அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

அதே போல் வெளிநாட்டு பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை துறப்பதற்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஓ.சி.ஐ., அடையாள அட்டை பெறுபவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பல்நோக்கு காரணங்களுக்காக இந்தியாவிற்குள் வந்து செல்லலாம். இதற்காக அவர்களுக்கு வாழ் நாள் விசா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்