சொந்த மகளை தவறான உறவுக்கு தூண்டிய தாயார்... கொலை செய்யவும் முயற்சி: அம்பலமான பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் தமிழகத்தில் பெற்ற மகளை தகாத உறவுக்கு தூண்டியதுடன் கொலை செய்யவும் முயன்ற தாயார் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது தொழில் அதிபர், அப்பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நான் பழம்பெரும் சினிமா பட இயக்குனர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவன். எனது உறவினர் ஒருவர் காவல்துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பாரம்பரியமிக்க எனது குடும்பத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது.

சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய எனது மகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை என்னிடம் கூறினாள்.அதைக் கேட்க எனக்கு அருவருப்பாக இருந்தது. ஆனால் அதை விசாரித்தபோது உண்மை என்று தெரியவந்தது.

எனது 14 வயது மகளிடம், எனது மனைவியே தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

உறவுக்கு மறுத்த எனது மகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். கொல்வதற்கும் துணிந்துவிட்டார்.

இதற்கு எனது மாமியாரும் உடந்தையாக செயல்பட்டது வருந்தத்தக்க விஷயம். நான் எச்சரிக்கை விடுத்தும் எனது மனைவியும், மாமியாரும் திருந்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து எனது மகளுக்கு தொல்லை கொடுத்த வண்ணம் உள்ளனர். எனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

இதனால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனு மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில், காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது தெரிந்ததும் புகார் கூறப்பட்ட பெண்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் கும்பகோணத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கும்பகோணத்திற்கு விரைந்த பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers