குடும்ப பாரம்.....வயது கடந்து நடந்த திருமணம்: 10 மாதங்களில் முடிவுக்கு வந்த ஒரு தமிழனின் வாழ்க்கை

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக ராணுவ வீரர் ஜெகன் பலியாகியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலப்பரின் மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும், தெற்குசூரங்குடி பகுதியை சேர்ந்த சுபி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சுபி 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப்பில் நக்சலைட் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஜெகனும் ஈடுபட்டு இருந்தார். அப்போது பயங்கரவாதிகள் சுட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ஜெகனின் உடல் இன்று சொந்த ஊர் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகனின் தந்தை வேலப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி, ஜெகனுக்கு 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர்.

சிறு வயதில் இருந்தே குடும்ப பாரத்தை சுமந்த ஜெகன், இரண்டு சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்புதான் தனது 38-வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், அந்த வாழ்க்கையும் இப்படி 10 மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்