நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து காணாமல் போன குழந்தை: பரபரப்பு சம்பவம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நவநீதகிருஷ்ணன் என்பவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நவநீதகிருஷ்ணன் யாஸ்மின் தம்பதியினருக்கு திருமணமாக ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக யாஸ்மின் கர்ப்பமாகியுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனியார் ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் யாஸ்மின் கர்ப்பமடைந்தது தெரிந்தது.

தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும் உறுதிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இவர், பிரசவத்திற்காக ஜூலை 1ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யாஸ்மீன் கர்ப்பமடையவில்லை என்று தெரிவித்தனர். இதனால் யாஸ்மின் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் நவநீதகிருஷ்ணன் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்