சகோதரி, தோழி என 80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள்! குற்றவாளி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

டிராக்வியூ செயலி மூலம் 80 பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதை லட்சக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்த தினேஷ்குமார் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தனது உறவுக்கார பெண் ஒருவரை கடந்தவாரம் சந்திக்கும்போது, அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொடுத்த செல்போனை தினேஷிடம் கொடுத்து அதில் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

டிராக்வியூ என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார் தினேஷ்.

அதுமட்டுமல்லாமல் டிராக்வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்தும்படியும் செய்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள கணவருடன் அந்தரங்கமாக பேசும் அத்தனை விஷயங்களையும் டிராக்வியூ மூலம் லேப்டாப்பில் பதிவு செய்துவிட்டார். பின்னர் அந்த பெண் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துக் கொண்டுள்ளார்.

இதனை வைத்து உறவுக்கார பெண்ணை மிரட்டி வந்துள்ளார். தான் கேட்கும் தொகையை கொடுக்க வேண்டும் அல்லது உனது கணவருடன் நீ பேசிய உரையாடல்கள் மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதைடுத்து தினேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்தபோது, கல்லூரியில் படித்த மாணவியின் செல்போனை திருடி அதிலிருந்த வீடியோக்களையும் திருடி மிரட்டினேன்.

இது வெளியே வந்த காரணத்தால் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன். இதைத் தொடர்ந்து தான் சந்திக்கும் உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என பெண்களின் போனை வாங்கி பார்ப்பது போல் அதில் டிராக்வியூவை டவுன்லோடு செய்துவிட்டு. அந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆணைக்கு இணங்க வற்புறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோவை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு பல லட்சங்களுக்கு விற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

அவரது கணினியை பொலிசார் சோதனையிட்டதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளையும் 140 பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்