அதிர்ச்சி வீடியோ! பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த சிறுமி

Report Print Basu in தெற்காசியா

பாகிஸ்தான் சிறுமி ஒருவர் AK-47 துப்பாக்கியால் சுட்டு மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து இரு நாடுகளும் காஷ்மீரை உரிமை கோரி வருகின்றனர்.

உரி தாக்குதலில் இந்திய வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானிடையே பதற்றநிலை நிலவி வருகிறது.

உரி தாக்குதலை தொடர்ந்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடுகள் தீவரவாதிகளை உருவாக்குவதாக பாகிஸ்தானை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் இரு நாட்டினரும் எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், பாகிஸ்தானை சார்ந்த சிறுமி மோடிக்கு எச்சரிக்கை விடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது மகளுக்கு AK-47 துப்பாக்கியை சுட பயிற்சி கொடுக்கிறார்.

பின்னர் குறித்த சிறுமி AK-47 துப்பாக்கியை சுட்டு இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments