தேனிலவில் காதலியுடன் ஓட்டமெடுத்த காதலி! மாறுபட்ட காதல் கதை

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

வங்தேசத்தில் பெண் ஒருவர் தனது தோழியை மறக்க முடியாமல் அவளுடன் ஓட்டமெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டக்காவை சேர்ந்த ஜன்னத் என்ற பெண்ணுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் நைனா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் நட்புறவுடன் பழகி வந்த இவர்கள் இருவருக்கும், நாளடைவில் ஒருவித இனம் புரியாத அன்பு ஏற்பட்டுள்ளது.

நம் இருவரால் பிரிந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் தான் ஜன்னத்துக்கு, மகேஷ் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் தேனிலவுக்காக கோவா செல்கையில், ஜன்னத் தனது தோழி நைனாவை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தோழியைப் பிரிந்து கணவருடன் செல்ல மணமகள் நைனா மறுத்து விட்டாள். இதனால் தகராறு ஏற்பட்டது.

அப்போது இரு தோழிகளும் சேர்ந்து புதுமாப்பிள்ளை மகேஷை ஒரு அறையில் போட்டு பூட்டி விட்டு இருவரும் கோவாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், அந்த அறையில் ஒருவழியாக தப்பிவந்து நடந்தவற்றையெல்லாம் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், நைனாவிடம் சென்று எனது மனைவி ஜன்னத்துடனான தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்ததுடன் தோழியை பிரிக்க பார்க்கிறாயா என்று கணவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

தற்போது இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இருவரும் கணவன் மனைவி போன்று கருதிக்கொண்டு அன்பு செலுத்தி வந்துள்ளதாகவும், அவர்கள் இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத நட்பு உருவாகிவிட்டது என தெரியவந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments