நேதாஜி இறந்து விட்டார்! ஜப்பான் தகவல்

Report Print Fathima Fathima in தெற்காசியா

இந்திய சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இவரது மரணம் தொடர்பாக வெளியாகும் அனைத்து தகவல்களையும் சேமிக்க பிரிட்டனில் உள்ள ஆஷிஸ் ரே என்பவர் இணையதளத்தை உருவாக்கினார்.

அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேதாஜியின் இறப்பு தொடர்பான அறிக்கையை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் திகதி தைவான் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

அதில் பயணம் செய்த நேதாஜிக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது, உடனடியாக அவரை மீட்டு தைபேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் அன்றைய தினம் 7 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது உடல் தைபே நகரில் உள்ள இடுகாட்டில் ஆகஸ்ட்22-ஆம் திகதி தகனம் செய்யப்பட்டது, நேதாஜி இறந்தபோது அவருக்கு வயது 48.

இதுதொடர்பான அறிக்கை இந்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments