விற்றமின் D குறைபாடு விரைவில் மரணத்தை ஏற்படுத்தும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

நடுத்தர வயதினரில் விற்றமின் D ஆனது குறைந்தளவு காணப்படுதல் அவர்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்விற்காக 20 வயதிற்கு மேற்பட்ட சுமார் 78,000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் Austrian-யை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த ஆய்வின்போது விட்டமின் D குறைபாடு உடையவர்கள் விரைவாக மரணமடைவதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விட்டமின் D குறைபாடானது மெலிந்த மற்றும் பலமற்ற எலும்புகளுக்கும் காரணமாக அமைகின்றது எனவும் சுட்டிக்காட்டியதுடன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான உயர் ஆபத்துக்கள் தொடர்பாகவும் குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்