இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருக்கிறது! ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை

Report Print Kabilan in விஞ்ஞானம்

இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் தற்போது ஆபத்தான இடத்தில் இருப்பதாக, ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை பற்றி ஆய்வு செய்ய ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது.

கடந்த ஜூன் 22ஆம் திகதி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இந்த விண்கலனில் இருந்து, விக்ரம் லேண்டர் பிரிந்து தரையிறங்க முயன்றது. அப்போது அதற்கும், கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. அத்துடன் அதனுடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘சந்திரனின் மேற்பரப்பு ஒரு ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும். அங்கு charge செய்யப்பட்ட துகள்கள் மற்றும் கதிர்வீச்சு நன்றாக சந்திர தூசியை சந்திக்கின்றன.

இதன் முடிவுகள் ஆச்சரியமானவை, கணிக்க முடியாதவை மற்றும் அபாயகரமானவை. அங்கு கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருக்கும். மேலும் தூசுகள் நிறைந்த பகுதியாகும். சந்திரனில் உள்ள தூசி, விக்ரம் லேண்டரின் உபகரணங்களுடன் ஒட்டிக்கொண்டு, இயந்திர சிக்கல்களை ஏற்படுத்தலாம். சூரிய பேனல்கள் மற்றும் பிற மேற்பரப்புகள் அவற்றின் செயல்திறனை குறைக்கலாம்.

மின்காந்த சக்திகள், சந்திரனின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள தூசுகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த துகள்களால் ஏற்படும் மின்காந்த அலைகள், எதிர்காலத்தில் லேண்டர்களுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கலாம். சந்திர தூசி மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் அதன் செயல்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை. லேண்டர் தரையிறங்கும் போது சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்க கூடியதாக இருக்கலாம்.

செங்குத்தான சரிவுகள் அல்லது பெரிய கற்பாறைகள் போன்ற ஆபத்துக்களையும் கண்காணிக்க வேண்டும். லேண்டர் உயிர்ப்புடன் இருக்கும் என்றால், நீங்கள் தொடர்ந்து விண்கலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் தூசி பிரச்னையை எதிர்த்துப் போராட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்