முதன் முறையாக கருந்துளையை படம் பிடித்த குழுவுக்கு பணப்பரிசு: எத்தனை மில்லியன் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அண்டவெளியில் காணப்படும் பல்வேறு வான்பொருட்களைப் போன்று கருந்துளைகளும் மர்மம் நிறைந்தவையாகும்.

கருந்துளைகளை தொலைகாட்டியின் உதவியுடன் படம் பிடிப்பதற்கு பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வந்தனர்.

எனினும் அம் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன.

ஆனால் இவ் வருடம் ஏப்ரல் மாதத்தில் Event Horizon Telescope Collaboration (EHT) எனும் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இதனை சாத்தியப்படுத்தியிருந்தது.

இதன்படி சூரியனை விடவும் பல மில்லியன் மடங்கு பெரிய கருந்துளை ஒன்றினை மூன்று வெவ்வேறு தினங்களில் படம் பிடித்திருந்தது.

இந்த மைல்கல்லை எட்டியதற்காக குறித்த விஞ்ஞானிகள் குழுவிற்கு சுமார் 3 மில்லியன் டொலர்கள் பணப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையானது குறித்த விஞ்ஞானிகள் குழுவில் உள்ள 347 விஞ்ஞானிகளுக்கும் தலா 8,600 டொலர்கள் வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்