நிலவில் வினோத பொருள்: கண்டுபிடித்தது சீனாவின் லூனார் ரோவர்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

நிலவின் தொலைவிலுள்ள பகுதி ஒன்றினை ஆய்வு செய்வதற்காக lunar rover Yutu-2 எனும் விண்கலத்தினை சீனா அனுப்பியிருந்தது.

இவ் விண்கலமானது நிலவில் ஜெல் போன்ற துணிக்கை இருப்பதற்கான ஆதாரத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.

இந்த தகவலை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் உண்மையில் அப் பொருள் என்னவாக இருக்கும் என்ற தகவலை சீன விஞ்ஞானிகள் இதுவரை வெளியிடவில்லை.

பனோரமா முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்விற்கு உட்படுத்திய Yu Tianyi என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழுவே நிலவில் ஜெல் போன்ற துணிக்கை இருப்பதை கண்டபிடித்துள்ளது.

இதேவேளை அவர்கள் குறித்த புகைப்படங்களை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்