மூன்றாம் கட்டமாக நிலவை நோக்கி பாதை மாற்றம் செய்யப்பட்டது சந்திரயான் 2

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து கடந்த வாரம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தின் பாதையில் இரு அடுக்கு மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மீண்டும் நிலவினை நோக்கி மூன்றாம் கட்டப் பாதை மாற்றம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது நிலவிலிருந்து 179Km X 1412Km எனும் ஒழுக்கில் (நீள்வட்டப் பாதையில்) சந்திரயான் 2 பயணித்துவருகின்றது.

இந்த தகலை இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்