மனித இரத்தத்தில் வினோத பொருளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

மனிதனில் வயது செல்லச் செல்ல பல மாற்றங்கள் ஏற்படுகின்றமை தெரிந்ததே.

அதிகமாக மறதி ஏற்படுதல், எழுந்து இருக்கும்போது எலும்பு மூட்டுக்களில் சிறிய ஒலி உருவாகுதல் போன்றவை வயதாதலுடன் ஏற்படும் சில மாற்றங்கள் ஆகும்.

ஆனால் முதன் முறையாக வயதாதலுடன் ஏற்படக்கூடிய மற்றுமொரு மாற்றத்தினை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.

அதாவது மனித இரத்தத்தில் எலும்பு போன்ற துணிக்கைகளும் சேர்ந்து பயணிக்கின்றமை முதன் முறையாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இது இதயத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகள் பற்றி மேலும் துல்லியமாக அறிந்துகொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

மேலும் இத் துணிக்கைகளே சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதற்கும் காரணமாக இருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வுகள் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்