மனிதக் கண்போன்ற இலத்திரனியல் உலோக வில்லையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இலத்திரனியல் முறை மூலம் கட்டுப்படுத்தக்கூடியதும், மனிதக் கண் போன்று செயற்படக்கூடியதுமான உலோக வில்லையினை செயற்கையாக உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.

தட்டையான வடிவில் காணப்படும் இந்த வில்லையானது 30 மைக்ரோன்ஸ் தடிப்பு உடையதாக இருக்கின்றது.

அதே நேரம் இவ் வில்லை வெவ்வேறு மில்லி மீற்றர்கள் அளவு கொண்ட விட்டத்திற்கு மாற்றியமைக்கப்படக்கூடியது.

ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள Harvard John A Paulson School of Engineering and Applied Sciences (SEAS) பகுதி விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர்.

மேலும் ஒரு புள்ளியில் இருந்தே ஒளியின் திருசியத்தை பார்க்கக்கூடியவாறு இருக்கின்றமை இவ் வில்லையின் சிறப்பியல்பாகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்