இருளில் மூழ்க போகும் தெற்கு பசிபிக் நாடுகள் .... இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம்

Report Print Kavitha in விஞ்ஞானம்

2019 ஜூலை 2 ஆம் திகதியான இன்று, தென் பசிபிக் பிராந்தியத்தில் முழு சூரிய கிரகணம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவே என்று சொல்லப்படுகின்றது.

இந்த நிகழ்வு சில்லி, அர்ஜென்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் அருகிலுள்ள பகுதிகளில் தெளிவாகக் காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த சூரிய கிரகணம் அமெரிக்க நேரத்தின்படி 12.55 மதியம் நிகழும். எனவும் சிலி நாட்டில் லா செரீனா எனும் இடத்தில், அந்நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணிக்கு தொடங்கி, மாலை 5:46 மணி வரை இந்த கிரகணம் நீள்கிறது.

இலங்கை, இந்திய நேரப்படி இன்று இரவு 10: 24 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2:14 மணிக்கு முழுமையடைகிறது.

மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே முழுமையான சூரிய கிரகணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

மேலும் சூரிய கிரகணத்தை www.exploratorium.edu, இதுபோன்ற வலைத்தளங்களில் நேரலையாக காணமுடியும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்