கோள்களுக்கு இடையே பந்து வடிவில் நகரும் காபன்கள்: ஹபிள் தொலைகாட்டி மூலம் அவதானிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அண்டவெளியில் கோள்களுக்கு இடையே காபன் துகள்கள் நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்பந்து வடிவில் நகரும் இக் காபன் துணிக்கைகள் காபன் 60 என அழைக்கப்படுகின்றது.

விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஹபிள் தொலைகாட்டியின் ஊடாகவே இந்த காபன் துணிக்கைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்ற வடிவங்கள் 2010 ஆம் ஆண்டில் நெபியூலா ஒன்றிலும், 2012 ஆம் ஆண்டில் நட்சத்திரம் ஒன்றின் ஒழுக்கிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்