விபத்தை சந்தித்த SpaceX விண்கலம்: வீடியோ வெளியானது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விண்வெளிக்கு சென்று திரும்பிய SpaceX விண்கலமானது தரையிறங்கும்போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இறங்குதளத்தினை குறுகிய நேரத்தில் தவற விட்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதான் தமது நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் கஸ்டமான காலம் என தலைமை நிறைவேற்று அதிகாரியான எலன் மொஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த SpaceX விண்கலம் இதுவரை 3 தடவைகள் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளது.

எனினும் பூமிக்கு திரும்பும்போது பாதுகாப்பாக தரையிறக்க பயன்படும் பூஸ்டர்களில் ஒன்று முறையாக இயங்காமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்