ஃகபைன் தொடர்பில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கோப்பியானது (Coffee) உலகளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் பானமாக விளங்குகின்றது.

அவுஸ்திரேலியாவில் உள்ள வயது வந்தவர்களில் ஏறத்தாழ அரைப் பங்கினர் கோப்பினை அருந்துகின்றனர்.

இப்படியிருக்கையில் கோப்பியிலுள்ள ஃகபைன் எனப்படும் பதார்த்தம் தொடர்பில் மீண்டும் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மனிதர்களின் நாளாந்த செயற்பாடுகளை அல்லது உடற்பயிற்சி செய்யும் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய வல்லமை இந்த கோப்பிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பி தொடர்பிலான முந்தையை 300 ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்விலேயே இந்த தகவல் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்விற்காக சுமார் 4,800 நபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்