ஆமைகளின் கண்ணீரை அருந்தும் வண்ணத்துப் பூச்சிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமேஷான் காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போது வண்ணத்துப் பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சகதி நிறைந்த பகுதிகளில் வாழும் வண்ணத்துப் பூச்சிகளே இவ்வாறு ஆமைகளின் கண்ணீரை அருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் உயிர்வாழ தேவையான சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

எனவே சோடிய ஊட்டச்சத்தினை பெறுவதற்காகவே வண்ணத்துப் பூச்சிகள் இவ்வாறு செயற்படுகின்றன.

பொதுவாக ஆண் வண்ணத்துப் பூச்சிகளே ஆமைகளின் கண்ணீரை அருந்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை வீடியோ ஆதாரமாகவும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.

மேலும் மனிதர்களின் சிறுநீரையும் வண்ணத்துப் பூச்சிகள் அருந்துகின்றமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers