மர்மமான முறையில் இறக்கும் ஆப்பிள் மரங்கள்: காரணம் தெரியாது திகைப்பில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமெரிக்காவில் சில பகுதிகளில் ஆப்பிள் மரங்கள் சராசரி ஆயுட் காலத்திற்கு முன்னரே இறக்கின்றமை விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

மஞ்சள் நிறம் மற்றும் சிவப்பு நிற தோல்களைக் கொண்ட ஆப்பிள் மரங்கள் இவ்வாறு இறப்படைந்துள்ளன.

2013 ஆம் ஆண்டிலிருந்தே இவ்வாறான நிகழ்வு அவதானிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பென்சில்வேனியாவின் ஸ்டேட் பல்கலைக்கழகமும் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

எனினும் இந்த எதிர்பாராத இறப்பிற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

இதற்கிடையில் ஏனைய ஆப்பிள் மரங்களும் இவ்வாறு இறப்பதை தடுப்பதற்கு சில வகை இரசாயனப் பதார்த்தங்களை விஞ்ஞானிகள் எழுந்தமானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை வடக்கு கலிபோர்னியாவில் உள்ள 80 சதவீதமான Orchards மரங்களும் இறப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்