நெப்டியூன் கிரகத்தில் புயல் உருவாவதை முதன் முறையாக படம் பிடித்தது ஹபிள் தொலைகாட்டி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இராட்சத புயல் ஒன்று தோற்றம் பெறுவதை வரலாற்றில் முதன் முறையாக ஹபிள் விண்வெளி தொலைகாட்டி படம் பிடித்துள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யூப்பிட்டர் கிரகத்தில் கிரேட் ரெட் ஸ்பொட் காணப்படுவது போன்று நெப்டியூன் கிரகத்தில் கிரேட் டார்க் ஸ்பொட் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட் டார்க் ஸ்பொட் என்பது வளிமண்டலத்தில் அமுக்கம் அதிகமாக இருக்கும் பிரதேசமாகும்.

விஞ்ஞானிகள் இதுவரை 6 டார்க் ஸ்பொட்களை நெப்டியூன் கிரகத்தில் அவதானித்துள்ளனர்.

இவற்றுள் இரண்டு 1989 ஆம் ஆண்டில் வொயாஜர் தொலைகாட்டியின் ஊடாக அவதானிக்கப்பட்டிருந்தன.

இவை இரண்டும் புயலாக உருவம் எடுத்திருந்தன.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டிலிருந்து ஹபிள் தொலைகாட்டி செயற்பட ஆரம்பித்ததன் பின்னர் 4 தடவைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

எனினும் இறுதி தடவையே புயல் பிறப்பெடுப்பது முதன் முறையாக அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்