அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

Report Print Jayapradha in விஞ்ஞானம்

இந்தியாவின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் அக்னி சீரிஸ் என்ற பெயரில் பல்வேறு ரக ஏவுகணைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தினர் அடிக்கடி விண்ணில் செலுத்தி பரிசோதித்து பார்ப்பது உண்டு.

அந்த வரிசையில் இன்று காலை அக்னி-5 ரக ஏவுகணை சோதனை நடந்தது. திட்டமிட்டப்படி குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை தாக்கியது. இதனால் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

கடைசியாக அக்னி-5 ரக ஏவுகணை சோதனை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு இருந்தது. 13 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அந்த ரக ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட அக்னி-5 ஏவுகணையால் 5 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும்.

ஒடிசா கடற்கரையில் இருந்த ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்ட அக்னி-5 ரக ஏவுகணை அணு ஆயுதங்களை தேவைக்கு ஏற்ப சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் 3 கட்ட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.

அக்னி-2 ஏவுகணை 2000 கிமீ தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதேபோல் அக்னி-3 ஏவுகணை 2500 கிமீ தொலைவும் அக்னி-4 ஏவுகணை 3500 கிமீ தொலைவும், அக்னி-5 ஏவுகணை 5000 கிமீ தொலைவும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் இந்த ஏவுகணையால் சீனாவின் வடக்கு பக்க எல்லை வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers