உலகிலேயே முதன் முறையாக 8K வீடியோ விண்வெளியிலிருந்து ஒளிபரப்பி அசத்திய நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடியோ கோப்புக்களின் தரமும் உயர்த்தப்பட்டு வருகின்றது.

இறுதியாக 4K எனப்படும் HD வீடியோ தொழில்நுட்பம் பயன்பாட்டில் காணப்பட்டு வந்தது.

இவ்வாறான வீடியோக்களை யூடியூப் தளத்திலும் பார்வையிட முடியும்.

இப்படியிருக்கையில் தற்போது முதன் முறையாக நாசா நிறுவனம் 8K எனப்படும் UHD (Ultra High Definition) வீடியோவை ஒளிபரப்பி சாதனை படைத்துள்ளது.

இவ் வீடியோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஒளிபரப்பப்ட்டுள்ளது.

இம் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது காணப்படும் வீடியோ வகைகளுள் இதுவே மிகவும் துல்லியம் வாய்ந்த வீடியோ தொழில்நுட்பம் ஆகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்