அல்ககோல் பாவனை பற்றிய புதிய ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இறப்பு மற்றும் நோய்களுக்கு காரணமாகும் எல்லா வகையான பெருட்களின் பட்டியலில் அல்ககோல் முதல் இடத்தைப் பிடிப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மையில் 15 தொடக்கம் 49 வயதுக்கிடைப்பட்டவர்களில் இது அதிக பாதிப்பை விளைவிப்பதாக கூறப்படுகின்றது.

கிட்டத்தட்ட 2.4 பில்லியன் அதாவது கிட்டத்தட்ட மூவரில் ஒருவர் அல்ககோலை எடுத்துக்கொள்கின்றனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களிலும் அதிகம்.

மேலும் பெண்கள் சராசரியாக ஆண்களிலும் குறைவான அளவையே எடுத்துக் கொள்கின்றனர்.

2016 இன் தரவுகளின்படி 15 - 49 வயதுக்கிடைப்பட்ட பெண்களில் 4 வீதமான இறப்புக்களையும், ஆண்களில் 12.2 வீத இறப்புக்களையும் ஏற்படுத்தியிருந்தது.

இது அவ்வருடத்தில் பலரின் வயதுக்கு முந்திய இறப்புகளுக்கு காரணமாகியிருந்தது.

பெரும்பாலான சமயங்களில் இவ் அல்ககோல் பாவனையானது Tuberculosis போன்ற மற்றைய நோய்த் தாக்கங்களின் விளைவுகளை மோசமாக்கியிருந்தது. அதேநேரம் வீதி விபத்துக்களுக்கும் முக்கிய காரணமாக விளங்கியிருந்தது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்