கலமொன்று எவ்வாறு இறக்கின்றது? அதன் பின் உள்ள மர்மம் என்ன?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

முதன்முறையாக விஞ்ஞானிகள் இறப்பு எவ்வாறு ஒரு கலத்தினூடு நகர்கின்றது மற்றும் எவ்வளவு விரைவாக அது நகர்கிறது பற்றியும் அளவிட்டுள்ளனர்.

இயற்கையான கல இறப்பைத் தூண்டும் அந்த சமிக்ஞை - ஒருவகை கலங்களின் தற்கொலை, அதே நேரம் இது திட்டமிடப்பட்ட கலங்களின் இற்பாகப் (PCD) பார்க்கப்படுகிறது, கலத்தினூடு நிமிடத்திற்கு 0.003 மில்லிமீட்டர் எனும் வேகத்தில் அலை வடிவில் பரவுகிறது.

இவ் அலை சமிக்ஞை செயற்பாடு trigger wave எனப்டுகிறது. இது செயற்படும் விதம் காட்டுத் தீ எவ்வாறு ஆரம்பப் புள்ளியிலிருந்து மற்றைய இடங்களுக்குப் பரவுகிறதோ அதே போன்றது.

பல்கல அங்கிகளில் கலங்கள் பிரிந்து புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இச் செயற்பாடு trigger waves இனைப் பயன்படுத்தி கலம் பூராவும் செயற்படுத்தப்படுகிறது.

இதே செயற்பாடு மூளையில் நரம்புச் செயற்பாட்டளுத்தம் வடிவில் காணப்படுகிறது. நரம்பிழையினூடு சமிக்ஞைகள் கடத்தப்படுவதும் trigger waves செயற்பாடே.

ஆனால் இதையொத்த செயற்பாடு கல இறப்பிற்கு காரணமாவது அறியப்படுவது இதுவே முதன்முறை.

கலங்களின் இறப்பிற்கான ஆய்வுக்கென ஆபிரிக்க தவளையின் முட்டையைப் பயன்படுத்தியிருந்தனர். அதன் குழியவுரு அகற்றப்பட்டிருந்தது. பின்னர் குழாயிலிடப்பட்டு அது பச்சைப் புரதத்தின் உதவியுடன் இறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இப் புரதம் இறப்பு ஆரம்பிக்கையில் ஒளிரத் தொடங்குகின்றது.

பச்சைப் புரதம் குழாயின் கீழ் நோக்கி நகர ஆரம்பிக்கின்றது, இது இறத்தல் செயற்பாடு trigger waves மூலம் பரவுவதை குறிக்கின்றது.

மேலும் அதன் மேற்பரப்பு நிறம் இருளாக மாறுவதையும், இம் மாற்றம் வளைந்த அலை வடிவில் மாறா வேகத்தில் நிகழ்ந்ததையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் ஆய்வில் caspases எனப்படும் நொதியம் இத் திட்டமிடப்பட்ட கல இற்பில் முக்கிய பங்காற்றுவதையும் அவதானிக்கமுடிந்திருக்கிறது.

உயிருள்ள கலங்களில் இந் நொதியத் தொழிற்பாடு நடைபெறுவதில்லை.

இதன்படி மேற்படி நொதியம் செயற்பட ஆரம்பிக்கையில் கல இறப்பு தூண்டப்படுகிறது. பின் அது அருகிலுள்ள caspases இற்கும் பரவ ஆரம்பிக்கின்றது.

இவ் ஆய்வு Science ஆய்வுப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்