ஒளிமயமான எதிர்காலம் அமைய சூரிய பகவான் விரத வழிபாடு

Report Print Jayapradha in மதம்

காலையில் நீராடிவிட்டு இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று.

காலம் காலமாக தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம்.

ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

சூரியன் சஞ்சரிக்கும் நட்சத்திரங்கள்
  • மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை அடங்கிய ராசி தான் சிம்ம ராசி. சூரியன் மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், ஜெகத்தை ஆளலாம்.
  • பூர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால் தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும்.
  • உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால் அத்தனை பேரும் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கை அமையும்.
சூரியனை வழிபடும் முறை
  • ஆவணி மாதத்தின் முப்பது நாட்களிலும் அதிகாலையில் சூரிய கவசம் பாடி சூரியனை வழிபட்டால் துன்பங்கள் துள்ளி ஓடும்.
  • ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதமாகும் என்பதால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது.
  • சூரிய நமஸ்காரம் செய்யும்போது சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்களைப் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக மாறும்.
  • கதிரவன் வழிபாட்டால் புகழ்பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும் மற்றும் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.
  • ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers