ஏழரை சனியை கஷ்டமின்றி கடக்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம்

Report Print Jayapradha in மதம்

ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார்.

மேலும் சனி பகவான் தனது கடமையைச் செய்வதில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரால் உண்டாகும் சோதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

யாருக்கு ஏழரை சனி பிடிக்கும்?
  • ஒருவரின் ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது.
  • அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை விரயச் சனி எனவும் அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை ஜென்மச் சனி என அழைப்பர்.
  • மேலும் அந்த ராசிக்கு 2ஆம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு கால கட்டத்தை பாதச் சனி என்றும் அழைக்கிறார்கள்.
பரிகாரம்
  • சனி பகவனால் பதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காகத்திற்கு தயிர் கலந்த சாதத்தில் எள்ளு சிறிதளவு கலந்து வைப்பது நல்லது.
  • சனிக்கிழமையில் வீடு தேடி வரும் பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் இயன்ற உணவினை தர்மம் செய்யுங்கள்.
  • ஆதரவற்ற முதியவர்கள், அநாதைச் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முடிந்த உதவியைச் செய்வதும் சனி பகவானுக்குச் செய்யும் பரிகாரமே ஆகும்.
  • வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து கலந்தது செய்யப்படும் பஞ்சதீப எண்ணெய் வீட்டில் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers