நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

Report Print Gokulan Gokulan in மதம்

யாழ் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 06ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இவ் ஆலயத்தில் தொடர்ந்து 10நாட்கள் நடைபெறவுள்ள மகோற்சவ பெருவிழாவில் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலங்களில் தினமும் மாலை தெய்வீக சொற்பொழிவு ஆலயத்தில் இடம்பெற்றுவருகின்ற நிலையில் சின்மயா மிஷன் யாழ் வதிவிட ஆச்சாரியார் ஜாக்ரத சைதன்யா சுவாமிகள் அவர்கள் “பகவத்கீதையின் மகத்துவம்”எனும் தலைப்பில் விஷேட சொற்பொழிவாற்றிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers