நடந்ததை நினைத்து பலனில்லை

Report Print Gokulan Gokulan in மதம்

பள்ளிக்குச் செல்லும் காலத்தில், பெற்றவர்கள் பிள்ளைகளைக் காலை ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார்கள் படிப்பதற்காக!

குழந்தைகளோ சோம்பல்பட்டு தூங்குவார்கள், பெற்றவர்களைத் திட்டுவார்கள். மாலை வேளையில் படிக்கச் சொன்னால் விளையாடப் போய் விடுவார்கள். விளைவு மார்க்கே இருக்காது. நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது.

பிற்காலத்தில் இதே மாணவர்கள் வளர்ந்து பெரியவனாகி ஏதோ ஒரு வேலைக்கு போயிருப்பார்கள். அப்போது பெற்றவர்கள் சொன்னதைக் கேட்காமல் விட்டதால் வந்த விளைவை நினைத்து கண்ணீர் வடிப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேலை கிடைத்துள்ளதோ, அதையாவது கருத்தூன்றி பார்க்க வேண்டும்.

அது கஷ்டமாகத் தெரிந்தால் அந்த வேலையைச் செய்யும் பலத்தையும், ஞானத்தையும் கடவுளிடம் மன்றாடி கேட்க வேண்டும். இதை விட்டு, 'எங்களுக்கு இப்படி ஒரு நிலையைத் தந்து விட்டீரே!' என ஆண்டவரிடம் கோபிப்பதில் அர்த்தமே இல்லை. நடந்ததை நினைத்து வருத்தப்படுவதிலும் நியாயமில்லை.

“ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி” என்கிறது பைபிள்.

- Dina Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers