ஆடம்பர வாழ்வு வேண்டாம்

Report Print Gokulan Gokulan in மதம்
145Shares
145Shares
lankasrimarket.com

எளிமையான வாழ்க்கையை இயேசுநாதர் ஆதரிக்கிறார். அவர் தன் வாழ்நாளில் உயர் ரக ஆடைகளை அணிந்ததில்லை. ஒரு சாதாரண அங்கி மட்டுமே அணிந்திருந்தார். அதிலும், மரணவேளையில் அந்த அங்கி கூட கழற்றப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.

இன்று தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள சிலர், ஆடம்பர ஆடைகள் அணிந்து, சென்ட் தடவி, பவுடர் போட்டு, உதட்டில் சாயம் தடவி சர்ச்சுக்கு வருகிறார்கள். இது தேவையில்லை என்கிறது பைபிள்.

இதனால் எல்லாம் நற்பெயர் கிட்டிவிடாது.பைபிளில் இரண்டு வசனங்கள் உள்ளன.

“மாபெரும் செல்வத்தை விட நற்பெயர் சிறந்தது,”

“அருமையான தைலத்தை விட நற்பெயர் சிறந்தது,”

சேவையின் மூலமும், எளிமையின் மூலமும் நற்பெயர் பெற முயற்சியுங்கள்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்