கடன் தொல்லையிலிருந்து விடுபட கணபதி பரிகார வழிபாடு

Report Print Printha in மதம்

ஒவ்வொரு வேண்டுதலுக்கும் கடவுளிடம் பரிகார வழிபாடு உள்ளது.

மனிதர்களுக்கு மன கஷ்டங்களில் ஒன்றாக இருப்பது கடன். பெரும்பாலும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களே ஏராளம்.

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் பலவிதமான வேதனைகளை மனதில் கொள்கிறார்கள்.

இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி.

வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் கணபதி கடவுளிடம், கடவுளே எங்களின் கடன் பிரச்சனைகள் விரைவில் தீர்க்க வேண்டும் என்று விநாயகரை வணங்க வேண்டும். இதற்கு

“ஓம் கணேசாய ருணம்

சிந்தி வரேண்யம்

ஹம் நம்; பட்ஸ்வாஹா”

என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

இந்த வழிபாடுகள் முடிந்தவுடன், சனிக்கிழமை விநாயகருக்கு சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

இதனால் கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.

“ஓம் க்லௌம் க்ரோம்

கணேசாய ருணம் சிந்தி

வரேண்யம் ஹம் நம், பட் ஸ்வாஹா”

என்ற மந்திரத்தை மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மால அணிவித்து அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டு, மேலும் அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து வந்தால், கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவுபெறும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments