ஈழத்து திருச்செந்தூர் முருகனின் வருடாந்த சித்திரத்தேர்

Report Print Kumar in மதம்

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்துர் முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

கிழக்கிலங்கையின் நீண்ட வரலாற்றினைக்கொண்ட இந்த ஆலயமானது மகாதுறவி சுவாமி ஓங்காரானந்தா சரஸ்வதி அவர்களினால் உருவாக்கப்பட்டு ஒரு சித்திர் பீடமாக அருள்பாலித்து வருகின்றது.

இலங்கையில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் தமிழ் முறைப்படி வேதங்கள் ஓதப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பத்து தினங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

முருகப்பெருமான் போர்க்கோலம் பூண்டு சித்திரத்தேர் ஏறி அடியார்களுக்கு காட்சி கொடுத்ததுடன், ஆண்கள் ஒரு பகுதியாகவும்,பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க முருகப்பெருமானின் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன்போது ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் தேரோட்டம்

வரலாற்று சிறப்புமிக்க கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் தேரோட்டம் இன்று ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பித்து கல்முனை பிரதான வீதியினூடாக தேரோட்ட பவனி இடம்பெற்றுள்ளது.

வள்ளி, தெய்வானை, சமேதராய் தேரில் ஆரோகணிக்கப்பட்ட முருகப்பெருமான் தேரேறி கல்முனை நகர் ஊடாக வலம் வருவதையும், மங்கள வாத்தியங்கள் முழங்க மாதர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்:குமணன்,சகாதேவராஜா

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்