புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம்

Report Print Navoj in மதம்

வாழைச்சேனை - புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கொடியேற்றத்துடன் உற்சவம் இன்று ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழா இடம்பெற்று, எதிர்வரும் 03ஆம் திகதி தீமிதிப்பு மற்றும் தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

இதன்போது தம்ப அபிஷேக பூசை, தம்ப பூசை, வசந்த மண்டப பூசை என்பனவும் இடம்பெற்றுள்ளது.

கொடியேற்ற உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், கொடியேற்ற பூசைகள் யாவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி சிவஸ்ரீ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்