பாற்குடபவனியுடன் வெகுசிறப்பாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி

Report Print V.T.Sahadevarajah in மதம்

மஹா சிவராத்திரி விரதத்தினை நேற்று இந்துக்கள் வெகு விமர்சையாக அனுஷ்டித்தனர்.

இந்நிலையில் காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மஹாசிவராத்திரி நிகழ்வு ஆலயத்தின் புதிய நிர்வாகசபைத் தலைவர் செ.புவனேந்திரன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

முதலில் ஆலயத்தில் இருந்து சிவலிங்கேஸ்வரர் ஊர்வலமாக காரைதீவு வீரபத்திரர் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.

அங்கிருந்து நூற்றுக்கணக்கான சிவபக்தர்கள் ஊர்வலமாக காரைதீவு ஆதி சிவன் ஆலயத்தைச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்