கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்றிரவு இடம்பெற்றுள்ளன.
இதன்போது பல்வேறு கலை, கலாச்சார சமய நிகழ்வுகள் மற்றும் விசேட பூசை வழிபாடுகள் என்பன நடத்தப்பட்டுள்ளன.
ஆலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் கொழும்பின் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.