20 வருட காதல் வாழ்க்கை!... மனைவி சந்தேகப்படாமல் இருக்க இதுதான் ரகசியம்- நெகிழும் மாதவன்

Report Print Fathima Fathima in உறவுமுறை

தென்னிந்திய சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் இன்றளவும் அது மாதவன் மட்டும் தான்.

அழகான தோற்றத்தாலும், மிரட்டலான நடிப்பாலும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கட்டிப்போட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

தமிழில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, இளைஞர்களின் ஆசை நாயகனாய் வலம் வந்த மாதவனது திருமணமும் காதல் திருமணம் தான்.

படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேர விரும்பிய மாதவனுக்கு வயது போதாததால், Personality Development வகுப்புகளை எடுத்து வந்துள்ளார்.

அங்கே தான் தன்னுடைய காதல் மனைவியான சரிதாவை சந்தித்துள்ளார், பார்த்தவுடன் பிடித்துப் போக நண்பர்களாக பழகியதில் காதல் துளிர்விட்டுள்ளது.

8 வருட காதல் வாழ்க்கைக்கு பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

தொடர்ந்து ஹிந்தியில் சீரியல்களில் சின்னசின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு, அலைபாயுதே ஹிட் அடிக்க படவாய்ப்புகள் வந்துள்ளன.

குடும்பம், சினிமா என இரண்டையும் சந்தோஷமாக கொண்டு சென்றதில் தன் மனைவியின் பங்கு அதிகம் என்கிறார் மாதவன்.

பட ஷீட்டிங்குக்காக எங்கு சென்றாலும் மனைவி சரிதாவை அழைத்து கொண்டு செல்வாராம் மாதவன், அப்போது தான் தன்னுடைய தொழில் பற்றி சரிதாவுக்கு நல்ல புரிதல் இருக்குமாம்.

எங்கு வெளியில் சென்றாலும், படத்தில் பிஸியாக இருக்கும் போது தன்னுடைய மொபைல் போனை சரிதாவிடம் கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

தன்னை பற்றிய எந்த ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், நம்பிக்கை குறையக்கூடாது என்பதற்காகவும் இப்படி செய்கிறாராம்.

குடும்பத்தை நிர்வகிப்பதில் இருந்து நிதி ஆலோசனை, விடுமுறை என அனைத்தையும் சரியாக திட்டமிடுவது வரை சிறப்பாக செய்வதால் 20 காதல் வாழ்க்கை படுகுஷியாக சென்று கொண்டிருப்பதாக மகிழ்கிறார் மாதவன்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்