இந்திய இளைஞனிடம் மனதை பறிகொடுத்த இலங்கை பெண்! முதலாமாண்டு திருமண நாள் கொண்டாட்டம்.. புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை

இலங்கையை சேர்ந்த பெண்ணும், இந்திய இளைஞரும் டுவிட்டர் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த் பிரகாஷ் (27). இவர் கடந்த 2015-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்ட ஒரு டுவீட்டை லைக் செய்தார்.

அதே டுவீட்டை இலங்கையை சேர்ந்த ஹன்சினி எதிர்சின்கே (26) என்ற பெண்ணும் லைக் செய்தார்.

பின்னர் ஹன்சினி டுவிட்டர் பக்கத்தில் அவருடன் கோவிந்த் நட்பு பாராட்டிய நிலையில் அது காதலாக மாறியது.

இரண்டு ஆண்டுகள் கழித்து 2017ல் ஹன்சினி இந்தியாவுக்கு வந்த நிலையில் முதல்முறையாக பிரகாஷை சந்தித்தார்.

இந்நிலையில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் பிரகாஷ் - ஹன்சினி திருமணம் கடந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்றது.

இந்த சூழலில் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் தங்கள் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடினார்கள்.

இதையடுத்து டுவிட்டரில் எங்களை இணைத்த நல் உள்ளங்களுக்கு நன்றி என புகைப்படங்களுடன் இருவரும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்