திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை ஜோடி! குவியும் வாழ்த்துக்கள்

Report Print Fathima Fathima in உறவுமுறை

பிரபல சின்னத்திரை நட்சத்திர காதல் ஜோடிகளான அன்வர்- சமீரா மிக எளிமையான முறையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

பிரபல டிவியின் பகல்நிலவு என்ற சீரியலில் அறிமுகம் ஆனவர்கள் அன்வர்- சமீரா, இதற்கு முன்பே இவர்கள் நிஜத்திலும் காதலர்கள் தான்.

தொடர்ந்து மற்றொரு தொலைக்காட்சியில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி அசத்தி வந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சமீரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மிக எளிமையான முறையில் சொந்த பந்தங்களுடன் சமீராவின் வீட்டிலேயே இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணம் என்ற பெயரில் ஆடம்பர செலவில்லாமல் அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவலாம் என்பதே இதற்கு காரணமாம்!!!

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்