என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என முதல் சந்திப்பிலேயே கேட்ட ரஜினி! மொட்டை அடித்த லதா.. அழகான காதல் கதை

Report Print Raju Raju in உறவுமுறை

திரையில் பல பெண்களை காதலிப்பது போல அழகாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நிஜ வாழ்விலும் அழகான காதல் கதை உள்ளது.

ஆம் 1978 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகராக வளர தொடங்கிய ரஜினிகாந்த், தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணான லதாவை தான் பிற்காலத்தில் மணந்தார்.

சென்னை எத்திரராஜ் கல்லூரியில் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.

தில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோது தான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

பேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போது தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டு விட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு ரஜினியின் சொந்த வாழ்க்கை பற்றி அறிய ஆரம்பித்துள்ளார் லதா. சிறு வயதில் அம்மாவை இழந்த ரஜினி, பல தடைகளை தாண்டி தான் சினிமாவில் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக படப்பிடிப்புக்கு சென்று வந்த காரணத்தால் ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்னையில் இருந்து விடுபட்டால், தான் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என கடவுளிடம் வேண்டி கொண்டார் லதா.

அதன்படியே பிரச்னையில் இருந்து மீண்டு வந்த ரஜினிக்காக, லதா மொட்டை அடித்துக்கொண்டார். இதற்கிடையில் தான், ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன், லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

பின்னர் ரஜினி - லதா திருமணம் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி திருப்பதி கோவிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers