கணவரின் முறைதவறிய அத்துமீறல்... நண்பருடன் கர்ப்பம்: விவாகரத்துக்கு 8 ஆண்டுகள் போராடிய இளம்பெண்

Report Print Arbin Arbin in உறவுமுறை

கணவரிடம் இருந்து பாலியல் அத்துமீறல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், இன்னொருவரை காதலித்த பெண் ஒருவர், குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு, விவாகரத்துக்காக 8 ஆண்டுகள் போராடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் அனுமதி தேடி செல்லவே, சாலை விபத்தில் சிக்கி அந்த இளைஞர் மரணமடைந்தார்.

காதலனின் இழப்பை அழுது தீர்க்கும் முன்னரே பெற்றோரின் நிர்பந்தத்தால் அந்த இளம்பெண்ணுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாத மனநிலை. திருமணம் முடிந்து வெளிநாட்டுக்கு சென்ற பின்னரும் ஒரு மனைவியாக முடியாமல் அவர் தவித்துள்ளார்.

தாலி கட்டிய அந்த நபரை கணவராக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவருக்கு. இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடவே அந்த நபர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

நாளுக்கு நாள் இதே சித்திரவதை. அவரின் இந்த மனநிலையை புரிந்து வைத்திருந்த அவரது நண்பர், இவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார்.

இதனால் இருவரும் நெருக்கமானார்கள். அந்த நெருக்கம் ஒருகட்டத்தில் இளம்பெண் கர்ப்பமடைய காரணமாக அமைந்தது.

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய உடன், அவர் தமது கணவரிடம் இருந்து விவாகரத்துக்கு புகார் அளித்துள்ளார்.

இவரது நிலை தெரியவந்த குடும்பத்தினரும் உறவினர்களும் அவரை தனிமைப்படுத்தினர்.

இருப்பினும் அவளது அந்த நண்பர் அப்போதும் ஆறுதலாகவே இருந்துள்ளார். துவண்டு போன ஒவ்வொரு நோடியும் தாங்கி கரை சேர்த்துள்ளார்.

கர்ப்பிணியான அவருக்கு குடும்பத்தினர் எவரும் துணையாக இருக்கவில்லை. ஒரு மகளை பெற்ற பின்னரும் விவாகரத்து வழக்கு மட்டும் 8 ஆண்டுகள் நீண்டது.

8 ஆண்டுகளுக்கு பின்னர் அதுவரை காத்திருந்த அந்த நண்பரையே அவர் திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோரின் திருமணத்திற்கு இனிப்பு வழங்கிய அந்த மகளே தமது தாயாரின் இந்த கதையை உளவியல் மருத்துவர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெற்றோருக்கு வாய்த்தது போன்று ஒரு காதல் காலம் தமக்கும் வாய்க்க வேண்டும் என ஆசைப்பட்ட அந்த இளம்பெண்,

தமது காதல் கதையையும் அந்த உளவியல் மருத்துவரோடு பகிர்ந்துள்ளார். தாயாரின் கதை கேட்டு, தனது காதலை உதறிய அந்த இளைஞருக்கு தாம் நன்றி சொல்வதாக கூறும் அந்த இளம்பெண்,

தமது காதல் முறிந்ததில் தமக்கு ஏமாற்றம் ஏதும் இல்லை என்றும், தமது தந்தையை போன்று காதலில் நம்பிக்கை கொண்ட ஒருவர் தமக்கு துணையாக வருவார் எனவும் அவர் அந்த உளவியல் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்