கணவன் இறந்தால் அதே குடும்பத்தில் வேறு நபரை மணக்கும் மனைவி! இதை பின்பற்றும் ஊர் பற்றி தெரியுமா?

Report Print Raju Raju in உறவுமுறை

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் ’கோண்ட்’எனப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்களிடையே ஒரு விசித்திர கலாச்சார பழக்கம் பல காலமாக நிலவி வருகிறது.

அதாவது இந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்களை விதவையாக பார்ப்பதே மிகவும் அரிதான ஒன்று.

ஏனெனில் இந்த பெண்களின் கணவர்கள் மரணமடைந்தால், கணவர் குடும்பத்தை சேர்ந்த வேறு ஆண் நபரை அந்த பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அதாவது தங்கள் பேரனை கூட பெண்கள் திருமணம் செய்து கொள்வதை காண முடியும்.

அதே சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை அந்த குடும்பத்தை சேர்ந்த எந்த ஆணும் மணக்க முன்வரவில்லை என்றால் அந்த பெண்ணுக்கு கணவர் இறந்த 10வது நாள் வெள்ளியால் செய்யப்பட்ட வளையல் அணிவிக்கப்படும்.

பின்னர் அந்த பெண்ணுக்கு பெரிய மனம் படைத்தவர்கள் தங்களால் முடிந்த பண உதவியை காலம் முழுவதும் செய்வார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்