கரன்ட் இல்லாதபோது காதலை சொன்ன என் புருஷன்: அறந்தாங்கி நிஷாவின் கலக்கலான காதல்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

நகைச்சுவையான பேச்சின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அறந்தாங்கி நிஷா தனது காதல் கதை குறித்து மனம் திறந்துள்ளார்.

பள்ளிக்காலத்தில் தனது அத்தை மகனை காதலிக்க ஆரம்பித்த நிஷா, 5 வருடங்கள் கழித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

எங்கள் உறவினர் திருமணத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்தபோது, கரன்ட் போயிருந்த நேரத்தில் எனது கையை பிடித்து நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் என கூறினார் ரியாஸ்.

அதன்பிறகு, அவர் வெளிநாடு சென்றுவிட்ட பிறகு லேண்ட் லைன் மூலம் இருவரும் பேசி எங்களது காதலை வளர்த்தோம். ஒரு முறை இவருக்கு காதல் கடிதம் எழுதி அனுப்பினேன், அதில் ஐ லவ் யூ என்ற வார்த்தையை மட்டும் ரத்தத்தில் எழுதியிருந்தேன்.

இதைப்பார்த்து விட்டு ரியாஸ்...என்ன புள்ள கலர் ஸ்கெட்ச்ல எழுதினாய் என கேட்டார். அட போய்யா...உனக்காக ரத்தத்தை வீணாக்கிவிட்டேன் என கூறி கிண்டல் செய்தேன்,இப்படி ரத்த சிந்தி வளர்ந்த காதல் எங்களுடையது.

ரியாஸ் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அப்பா, என்னை அவருக்கு திருமணம் செய்துவைக்க தயங்கினார். பிறகு உறவினர்கள் உதவியுடன் எங்களது திருமணம் நடந்தது.

எனது கணவர் எனக்கு அனைத்து உரிமைகளும் கொடுக்கிறார். எனது திறமையை வெளிக்காட்ட பக்கபலமாக இருக்கிறார் என்றார்.

ரியாஸ் பேசுகையில், திருமணமான நேரத்தில் எனக்கு வெளிநாட்டு வேலை இல்லாமப்போக, நிஷாதான் பட்டிமன்றத்துக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க.

ரெண்டு வருஷம் கழிச்சு எனக்கு அரசு வேலை கிடைச்சது. இடைப்பட்ட காலத்துல எவ்வளவோ கஷ்டங்கள். நிஷா மாதிரி ஒரு மனைவி கிடைச்சது என் பாக்கியம் என்று நெகிழ்கிறார் ரியாஸ்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்