கூட்டு எண் 6 (15, 24 ) திருமண வாழ்க்கை ரகசியம் இதுதான்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

எண் 6 என்பது சுக்கிரனின் எண்ணாகும். இந்த கிரகம் காதல் மற்றும் சமாதானத்திற்கான கிரகம் ஆகும்.

காதல் மற்றும் ரொமான்ஸ் என்று வரும்போது 6 ம் எண் நபர்கள் காந்தம் போல் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவராக இருக்கின்றனர். அவர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பதால் அவர்களே காதலை முன்மொழிகின்றனர்.

6ம் எண் நபர் எதையும் கையாளும் திறன் கொண்டவர்கள். திருமணத்திற்கு பின் மற்றொரு புதிய உறவில் ஈடுபடும் வாய்ப்புகளும் உண்டு. தனது துணையுடன் உணர்வு பூர்வமாக நெருக்கம் உண்டாகாத நேரத்தில் இது போன்ற அந்நிய உறவின் மீது ஈர்ப்பு உண்டாகலாம்.

இந்த வகை நபர்கள், மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் திருமணத்தில் நாட்டம் கொள்ள வேண்டும். 2 ம் எண் நபர்களைப் போல் பாலியல் தொடர்பில் அதிக நாட்டம் இல்லாதவர்கள் இவர்கள். உடல் ரீதியான தொடர்பை விட மன ரீதியான தொடர்பு முக்கியம் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

பொதுவாக 6 ம் எண் நபர்கள் மிகவும் அழகாக தோற்றமளிப்பதால், இவர்களைச் சுற்றி பெரும்பாலும் எதிர் பாலினத்தவர்கள் சூழ்ந்திருப்பார்கள்.

இவர்கள் அழகால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பண்பைக் கண்டு சக தோழர்கள் பொறாமைப் படுவார்கள். காதல் செய்வதில் வல்லவர்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers