கூட்டு எண் 3 (12, 21, 30 ) இல் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

காதல் மற்றும் திருமணம் என்று வரும்போது 3 ம் எண் கொண்ட நபர்களும் 1 ம் எண் நபர்களின் ஒத்த குணநலன்களைக் கொண்டிருப்பார்கள்.

நடைமுறையை அதிகம் பின்பற்றுபவராக இருப்பார்கள். அவர்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் இதயம் சொல்வதை ஏற்க மாட்டார்கள்.

3ம் எண் நபர்கள் பயமற்றவர்கள். குறிக்கோள் மிகுந்தவர்கள். அவர்களுக்கான சட்டத்தை அவர்களே வகுத்துக் கொள்வார்கள். தன்னலம் மிக்கவர்கள். சிறப்பான ஒருவரை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

2, 6, 7 மற்றும் 8ம் எண் நபர்களைப் போல் ரொமான்ஸ் அதிகம் இல்லாதவர்கள் இவர்கள். துணையுடன் அதிக நேரம் செலவழிப்பதை விரும்ப மாட்டார்கள்.

இவர்களின் முக்கிய விருப்பம் வேலை மட்டுமே. காதலில் தனது துணையின் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். எல்லா துறையிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்

இவரோடு நட்பாக அல்லது உறவாக இருக்கும் நபர்கள் தங்களை இரண்டாவதாக உணரும் தன்மை கொள்பவராக இருக்கும்பட்சத்தில் இவர்களின் உறவில் எந்த ஒரு சிக்கலும் இருப்பதில்லை.

3ம் எண் நபருடன் நெருங்கி நேரம் செலவிடும்போது இந்த தன்மைகள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்