ஏன் உசுரோடு இருக்கே.... செத்துருனு சொன்னாங்க: இதயத்தில் ஈரம்பாய்ச்சிய காதல் கதை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

ஒரு ஆணை இரண்டு ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்து, தற்போது அந்த காதல் கைகூடிய சந்தோஷத்தில் இருக்கிறார் திருநங்கை ஶ்ரீஜா.

மூர்த்தி என்ற பெயருடன் ஆணாக வலம் வந்த எனக்கு, என்னுடைய சின்ன வயசிலேயே உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணரமுடிந்தது.

அம்மாதான் கஷ்டப்பட்டு என்னையும் என் தம்பியையும் படிக்கவச்சாங்க. என் நடவடிக்கையைப் பார்த்து எனது பள்ளியில் அனைவரும் என்னை கிண்டல் செய்தார்கள்.

சொந்தக்காரங்க `நீ ஏன் உசுரோடு இருக்கே. செத்துருனு சொன்னாங்க. ஆனால், அந்த நேரத்திலும் என் அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார்.

என் அம்மாகிட்ட `நான் பொண்ணா மாறணும்மா. என்னைப் புரிஞ்சுக்கோனு சொன்னேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சதும், அம்மாவே எனக்கு அறுவை சிகிச்சைக்கு செய்வதற்கு உதவி செய்தார்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஶ்ரீஜா என எனது பெயரை மாற்றிக்கொண்டேன். ஒரு நாள் குலசை திருவிழாவுக்கு எனது தோழியுடன் சேர்ந்து போயிருந்தேன். அங்கே என்னோடு படிச்ச விஜய், என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசினான்.

அப்போது, விஜய்யின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவனது நண்பன் அருண், நீங்க பொண்ணு மாதிரி அழகாய் இருக்கீங்க என கூறினார். நான் சிரித்துக்கொண்டே வந்துவிட்டேன்.

அன்று தான் அருணை நான் முதன் முதலாக பார்த்தது. பிறகு, எனது நண்பர் விஜய்யின் கடைதிறப்பு விழாவுக்கு சென்றேன், அப்போது அங்கு அருணும் இருந்தார்.

மீண்டும் சந்தித்தபோது ஒருவருக்கொருவர் நன்றாக பேசினோம். அன்றிலிருந்து நண்பர்களாக பழகினோம்.

ஒருநாள், `உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார். என்னால் நம்பவே முடியலை. என்னை ஏமாற்றுகிறார் என நினைத்தேன்.

நீ ஒழுங்காப் படி. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார். நானும் அப்படியே நடந்துக்கிட்டேன். அலைஞ்சு திரிஞ்சு போராடி என் சான்றிதழ்களில் திருநங்கைன்னு மாத்தினோம்.

தற்போது, தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். அருணின் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனக்கு நீதான் முக்கியம். உன்னைவிட்டுப் போகமாட்டேன்னு சொன்னார்.

என்னாலும் அவர் இல்லாம இருக்க முடியாது. ரெண்டு பேரும் பேசி திருமணம் செஞ்சுக்க முடிவு பண்ணி பல போராட்டங்களுக்கு பிறகு பதிவு திருமணம் செய்துகொண்டோம்.

இனியாவது என் மாமா வீட்டுல எங்களை ஏத்துப்பாங்கன்னு நம்பறேன். எங்களுக்குக் குழந்தை வேணும்னு தோணுச்சுன்னா, மாமாவின் சொந்தத்தில் குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம். இல்லைன்னா, அவருக்கு நான் குழந்தை எனக்கு அவர் குழந்தைன்னு மகிழ்ச்சியாக இருப்போம் என கூறுகிறார் ஶ்ரீஜா.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்