கடல் கடந்து வெளிநாட்டு பெண்ணுடன் மலர்ந்த காதல்: அபூர்வ திருமணம்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

கேரளாவில் புகழ் பெற்ற கோவில் புரோகிதர்கள் குடும்பத்தை சேர்ந்த அக்னி சர்மன், சென்னையில் உள்ள சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா தயாரிப்பை பற்றி கற்பதற்காக அதில் இணைந்துள்ளார்.

சினிமா எடிட்டிங் கலையை பற்றி அக்னிசர்மனுக்கு பாடம் நடத்திய பிரபல எடிட்டர் லெனின், அது பற்றி கூடுதலாக கற்றுக்கொள்ள ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் பிலிம் அகாடமிக்கு செல்லுமாறு கூறினார்.

உலகப் புகழ் பெற்ற அந்த நிறுவனத்தில் சேர்ந்து அக்னிசர்மன் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இணையதளம் வழியாக சினிமாவை பற்றி அவருடன் கருத்து பரிமாறத் தொடங்கினார் சுலோவோக்கியா நாட்டை சேர்ந்த சிமோனா.

தொடர்ந்து பேசினார்கள். விவாதித்தார்கள். ஒருகட்டத்தில் அந்த கருத்து பரிமாற்றம் அவர்களுக்குள் காதலை உருவாக்கிவிட்டது.

சினிமாவை அளவுக்கு அதிகமாக நேசித்த சிமோனாவுக்கும் சினிமாவை பற்றி கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. அவர் சுலோவோக்கியாவில் உள்ள இன்டர்நேஷனல் பிலிம் அகாடமியில் சேர்ந்து திரைக்கதை எழுதுவதற்கும், எடிட்டிங் செய்வதற்கும் பயிற்சி பெற்றவர்.

இந்தியாவின் கலை, கலாசாரம், இலக்கியம், சினிமா போன்ற அனைத்துமே இவரை ஆச்சரியப்படுத்தியதால், அது பற்றி அக்னி சர்மனுடன் நிறைய விவாதித்தேன்.

காதல் வசப்பட்ட நாங்கள் எங்கள் நாட்டில் உள்ள உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்த நினைத்தோம். ஆனால் கேரளாவில் ஏற்பட்ட திடீர் மழையால் எங்கள் திட்டம் முழுமை பெறவில்லை.

ஆகம முறைப்படி திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டோம்” என்கிறார் சிமோனா.

தாந்திரீக பாரம்பரிய முறைப்படி சிமோனாவை முதலில் அக்னிசர்மனின் நம்பூதிரி குடும்பம் தத் தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களை சார்ந்த ஒரு குடும்பத்தினர் அப்போது சிமோனாவை தங்கள் மகளாக தத்தெடுத்தனர்.

தத்தெடுத்த நம்பூதிரி குடும்பத்தினர் சிமோனாவுக்கு துளசி என்ற புதிய பெயரையும் சூட்டினார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers