10 வயது குறைவான நபருடன் பிரியங்காவிக்கு காதல் மலர்ந்தது எப்படி?

Report Print Jayapradha in உறவுமுறை

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. பிரியங்காவுக்கு இசை மீது அதிக பிரியம். அந்த இசையே இவர்களது காதலுக்கு இணைப்பாக அமைந்தது. ஆம் வயது வித்தியாசத்தை இந்த இசை மறைத்துவிட்டது.

இவர்களின் முதல் சந்திப்பானது 2017 ஆண்டு நடைபெற்ற MET GALA என்ற நிகழ்ச்சியில் தான் நடந்தது. பின்பு US Memorial Day, 2018 இருவரும் எதிர்பாரத விதமாக சந்தித்து கொண்டனர்.

அதற்கு பின்பு இருவரும் Beauty & The Beast show in Los Angeles என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்பொழுது பிரியங்கா அளித்த பேட்டியில் என் வாழ்கையில் நடக்கும் அனைதிலும் 90 சதவிகிதம் பொதுவானதாக இருந்தாலும் , அதில் 10 சதவிகிதம் எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது, நான் ஒரு பெண் என் வாழ்க்கையை தேர்வு செய்ய எனக்கு உரிமை உண்டு என்று கூறினார்.

சமீபத்தில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிக் ஜோன்ஸின் பெற்றோரும் மும்பைக்கு வந்தனர்.

மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.

கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதில் சிறிய நபரை திருமணம் செய்வது குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், அதற்கு செவிமடுக்காமல் திருமணம் செய்யவிருக்கின்றனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்